West Indies vs Afghanistan Match 40 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் எது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே இந்த குரூப்பில் இருந்து இந்த இரண்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானது அடுத்த சுற்றுக்கான பயிற்சியாகவே கருதப்படுகிறது.  இருப்பினும் இவ்விரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

WI vs AFG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - டேரன் சமி தேசிய மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - ஜூன் 18, காலை 06 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

WI vs AFG Pitch Report

செயின்ட் லூசியாவில் உள்ள மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் இங்கு பேட்டர்கள் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் ஆகிவை கிடைக்கும் என்பதால், புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கு தங்கள் திறனை வெளிப்படுத்தலாம்.

WI vs AFG T20I Head to Head Record

 

  • மோதிய போட்டிகள் - 07
  • வெஸ்ட் இண்டீஸ் - 04
  • ஆஃப்கானிஸ்தான் - 03
Advertisement

WI vs AFG: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

West Indies vs Afghanistan Probable Playing XI

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அகில் ஹுசைன், ஆண்ட்ரே ரஸல், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி.

ஆஃப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், குல்பதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான், கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.

WI vs AFG T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - இப்ராஹிம் ஸத்ரான், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்
  • ஆல்ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், குல்பாதின் நைப்
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான் (துணை கேப்டன்), நவீன் உல் ஹக், அல்ஸாரி ஜோசப், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
Advertisement

WI vs AFG Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match WI vs AFG, WI vs AFG Dream11 Team, Fantasy  Cricket Tips, WI vs AFG Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs Afghanistan

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News