Steven Smith: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் ஜோஷ் இங்கிலிஸுக்கு பதிலாக காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே பார்படாஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 159 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Advertisement

இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அந்தவகையில் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித், தனது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதியளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய மெக்டொனால்ட், “ஸ்டீவ் ஸ்மித் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். மேலும் அவருக்கு தற்போது எந்த ஆபத்தும் இருக்காது. இதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அடுத்த ஆட்டத்திற்கு முன்னதாக, அவருக்கு இரண்டு நாட்கள் இடைவெளி உள்ளது. அவர் போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சியில் பங்கேற்பார். அதில் அவர் உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் 4ஆம் இடத்தில் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது காயம் குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், “எனக்கு, இது சாதாரண பயிற்சி மாதிரிதான் இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு உண்மையில் எந்த வலியோ அல்லது வேறு ஏதாவது அசௌகரியத்தையோ உணரவில்லை. அதனால் நான் தற்போது நன்றாக இருப்பது போல் உணர்கிறேன். மேலும் பேட்டிங் செய்வதற்கும் எனக்கு எந்த இடையூறும் இல்லை. ஆனால் விக்கெட்டுக்கு முன்னால் சில பந்துகளை ஃபீல்டிங் செய்வது எனக்கு மிகவும் விசித்திரமான விஷயமாக இருக்கும். 

ஒரு டெஸ்ட் போட்டியில் நான் அப்படிச் செய்ததில்லை என்று நினைக்கிறேன். மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃப் அல்லது ஃபைன் லெக்கில் ஃபீல்டிங் செய்வதற்கும், இரண்டாவது அல்லது முதல் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்வதற்கும் சற்று வித்தியாசம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News