வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய தன்ஸித் ஹசன் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து கேப்டன் லிட்டன் தாஸும் முதல் பந்திலேயும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் 8 ரன்களுடன் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த சமீயா சர்க்கார் - ஜக்கார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவையான சமயத்தில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

மேலும் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் நிதானமாக விளையாடி வந்த ஜக்கார் அலி  27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌமியா சர்க்கார் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த மஹெதி ஹசன் மற்றும் ஷமின் ஹொசைன் இணை அணியை கரைசேர்க்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமிம் ஹொசைன் 27 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மஹெதி ஹசன் 26 ரன்களிச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அகீல் ஹொசைன் மற்றும் ஒபேத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னிலும், அதிரடியாக தொடங்கிய ஜான்சன் சார்லஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 20 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் அண்ட்ரே ஃபிளெட்சர் உள்ளிட்டோர் சொற்ப ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து குடகேஷ் மோட்டி 6 ரன்களுக்கும், அகீல் ஹொசைன் 2 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 61 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ரொமாரியோ ஷெஃப்பர்ட் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

இதில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட ரோவ்மன் பாவெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 60 ரன்களைக் கடந்த நிலையில், மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபர்ட் 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 18 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ரோவ்மன் பாவெல் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத், தஸ்கின் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் பந்துவீச்சில் அசத்தில் மஹெதி ஹசன் ஆட்டநாயகன் விருதை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News