வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 17ஆம் தேதி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க்பிராத்வைட் 4 ரன்னிலும், கேசி கார்டி ரன்கள் ஏதுமின்றியும், கேவன் ஹாட்ஜ் 25 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த மைக்கைல் லூயிஸ் - அலிக் அதனாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தின. மேலும் இருவரும் இணைந்து தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர். 

Advertisement

அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கைல் லூயிஸ் 97 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 90 ரன்கள் சேர்த்திருந்த் அலிக் அதானாஸும் 90 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜஸ்டின் கிரீவ்ஸ் பொறுப்புடன் விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 115 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 450 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. 

வங்கதேச அணி தரப்பில் ஹசன் மாஹ்மூத் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் ஜக்கார் அலி மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் அரைசதங்களை அடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அந்த அணியில் அதிகபட்ச்மாக ஜக்கர் அலி 53 ரன்களையும், மொமினுல் ஹக் 50 ரன்களையும், லிட்டன் தாஸ் 40 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

பின்னர் 181 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 152 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

இதனையடுத்து 333 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் 45 ரன்களையும், ஜக்கர் அலி 31 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இறுதியில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News