வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

Advertisement

இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியனது இன்று (டிசம்பர் 12) செயின்ட் கிட்ஸி உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமீய் சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லிட்டன் தாஸும் ரன்கள் ஏதுமின்றிம் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் சௌமீயா சர்க்காருடன் இணைந்த கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 73 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 77 ரன்கள் எடுத்த கையோடு மெஹிதி ஹசன மிராஸும் விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் 15 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மஹ்முதுல்லா மற்றும் ஜக்கார் அலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹ்முதுல்லா தனது அரைசதத்தை பதிவுசெய்தார். மேலும் இத்தொடரில் அவர் பதிவுசெய்யும் மூன்றாவது அரைசதமாகவும் இது அமைந்தது. அவருடன் இணைந்து விளையாடிய ஜக்கார் அலியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வந்த மஹ்முதுல்லா 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 84 ரனகளையும், ஜக்கார் அலி 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 321 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கிங் 15 ரன்னிலும், அலிக் அதனாஸ் 7 ரன்னிலும் கேப்டன் ஷாய் ஹோப் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 31 ரனனில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேசி கார்டி மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் கேசி கார்டி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

பின் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 30 ரன்னில் விக்கெட்ட இழந்தார். அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் அமீர் ஜாங்குவும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் சதத்தை நெருங்கிய கேசி கார்டி 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 95 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த் ரோஸ்டன் சேஸூம் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 234 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இணைந்த அமீர் ஜாங்கு மற்றும் குடகேஷ் மோட்டி இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய அமீர் ஜாங்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 104 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய குடகேஷ் மோட்டி 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 45.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News