வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முதலிரண்டு போட்டியின் முடிவிலும் வங்கதேச அணியானது வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்டில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இத்தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த லிட்டன் தாஸ் இப்போட்டியிலும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 களமிறங்கிய தன்ஸித் ஹசனும் 9 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தன்ஸித் ஹசனும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் மிராஸ் - ஜக்கார் அலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெஹிதி ஹசன் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜக்கார் அலி அரைசதம் கடந்ததுடன் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கின் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜஸ்டின் க்ரீவ்ஸும் 6 ரன்களில் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 15 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 23 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரொமாரியோ ஷெஃபர்ட் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வங்கதேச அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற் கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News