இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரிலும் 2-0 என்ற காணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது இன்று செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் என் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர்பிளே ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ரொமாரியோ ஷெஃபர்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோவ்மன் பாவெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருடன் இணைந்து விளையாடிய வந்த ரொமாரியோ ஷெஃபர்ட் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என  54 ரன்களைச் சேர்த்த கையோடு ரோவ்மன் பாவெலும் தனது விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் அல்ஸாரி ஜோசப் தனது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு வில் ஜேக்ஸ் நிதான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், மறுபக்கம் பில் சால்ட், ஜோஸ் பாட்லர், ஜேக்கப் பெத்தெல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அவர்களைத் தொடர்ந்து 30 ரன்களைச் சேர்த்த் கையோடு வில் ஜேக்ஸும் ஆட்டமிழந்தார். அதன் பின் இணைந்த சாம் கரண் - லியாம் லிவிங்ஸ்டோன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தேவையான சமயங்களில் பவுண்டரிகளை அடித்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாம் கரண் 41 ரன்களுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 39 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதற்கிடையில் டேன் மௌஸ்லியும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இறுதியில் ஜேமி ஓவர்டன் 4, ரெஹான் அஹ்மத் 5 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியா சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News