அஸ்வின் பந்துவீச்சுக்கு முன்னால் இவர்கள் மண்டியிட வேண்டும் - ஆகாஷ் சோப்ரா பாராட்டு!

Updated: Mon, Aug 01 2022 19:38 IST
WI vs IND: Aakash Chopra gives big compliment to Ravichandran Ashwin (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி மிக சிறந்த முறையில் விளையாடிய ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது, மேலும் அதனை ஒட்டி நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் என்று கூறலாம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர்.ஆனால் பந்துவீச்சில் அனைவரும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர்.

குறிப்பாக எட்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரி என்ட்ரி கொடுத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான நிக்கோலஸ் பூரான் மற்றும் சிம்ரோன் ஹெட்மைர் ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் தன்னால் சிறப்பாக செயல்படும் என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அஸ்வின் நிரூபித்துக் காட்டியுள்ளார். டெஸ்ட் தொடரில் மட்டுமே அதிகமாக இந்திய அணியால் பயன்படுத்தப்படும் இந்திய அணியின் சீனியர் சுழற் பந்துவீச்சாளர்  அஸ்வினை உலக கோப்பை தொடரை மனதில் வைத்துக்கொண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறக்கியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது, குறிப்பாக அஸ்வின் விளையாடியது சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் அஸ்வின் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். 

பூரன் மற்றும் ஹெட்மையர் ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுவிட்டது. அஸ்வின் பந்து வீழ்ச்சிக்கு முன் இடது கை பேட்ஸ்மேன்கள் மண்டியிட வேண்டும். பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். அவர் அடித்த சிக்சர் மிக அருமையாக இருந்தது. மேலும் தினேஷ் கார்த்திக் தேவையான சப்போட்டையும் அஸ்வின் கொடுத்துள்ளார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை