West Indies vs New Zealand Match 26 Dream11 PredictionICC T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. மொத்த நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 20 அணிகளில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நிலையில், நியூசிலாந்து அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 

WI vs NZ: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து
  • இடம் - பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்
  • நேரம் - ஜூன் 13, காலை 6 மணி (இந்திய நேரப்படி)

WI vs NZ: Pitch Report

Advertisement

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தின் பவுண்டரிகள் எல்லைகள் சிறியது என்பதால் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக கருதப்படுகிறது. அதேபோல் இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோரானது 160 முதல் 165 ஆக உள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புதிய பந்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கு என்பதால் அவர்களாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

WI vs NZ: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 19
  • நியூசிலாந்து - 11
  • வெஸ்ட் இண்டிஸ் - 06
  • முடிவில்லை - 02

WI vs NZ: Live Streaming Details

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

West Indies vs New Zealand Predicted Teams

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: ஜான்சன் சார்லஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல் (கே), ஆண்ட்ரே ரஸல், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி

நியூசிலாந்து உத்தேச லெவன்: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன் (கே), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரெண்ட் போல்ட், லோக்கி ஃபெர்குசன்.

WI vs NZ Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன், டெவான் கான்வே
  • பேட்டர்ஸ்: கேன் வில்லியம்சன், பிராண்டன் கிங், க்ளென் பிலிப்ஸ் (துணை கேப்டன்), டேரில் மிட்செல்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆண்ட்ரே ரஸல் (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: அகீல் ஹொசைன், லோக்கி ஃபெர்குசன்

West Indies vs New Zealand Fantasy Tips, WI vs NZ: Dream11 Team West Indies vs New Zealand: Predicted XIs, WI vs NZ: Pitch Report, WI vs NZ Live Streaming Details, WI vs NZ: Head-to-Head, WI vs NZ: Dream11 Prediction match 26 ICC T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News