West Indies vs Papua New Guinea Dream11 Prediction Match 2, ICC T20 World Cup 2024: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதுமட்டுமின்றி எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் சி குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அறிமுக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பப்புவா நியூ கினியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளும் முதல் முறையாக டி20 போட்டிகளில் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

WI vs PNG Match Details

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா
  • இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

WI vs PNG : Pitch Report

Advertisement

பிராவிடன்ஸ் மைதானமானது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு பெயர் போனது. இங்குள்ள மைதானமாது முதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு வழிவகுக்கும். அதன்பின் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏறபடுத்த முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது, குறிப்பாக ஆடுகளத்தின் வேகம் குறையும் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் உதவியாக அமையும். இருப்பினும் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் நிச்சயம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WI vs PNG : Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • வெஸ்ட் இண்டீஸ் - 00
  • பப்புவா நியூ கினியா - 00
  • முடிவில்லை - 00

WI vs PNG: Live Streaming Details

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

West Indies vs Papua New Guinea Predicted Teams

வெஸ்ட் இண்டீஸ்: ஜான்சன் சார்லஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், குடாகேஷ் மோட்டி

பப்புவா நியூ கினியா: டோனி உரா, செசே பாவ், அசாதுல்லா வாலா, லெகா சியாக்கா, சார்லஸ் அமினி, ஹிரி ஹிரி, கிப்லிங் டோரிகா (வாரம்), சாட் சோப்பர், நார்மன் வனுவா, ஜான் கரிகோ, கபுவா மோரியா

WI vs PNG Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (துணைக்கேப்டன்)
  • பேட்டர்ஸ்: பிராண்டன் கிங் (கேப்டன்), லெகா சியாக்கா
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆண்ட்ரே ரஸல், சார்லஸ் அமினி, அசாதுல்லா வாலா, ரோவ்மன் பாவெல்
  • பந்துவீச்சாளர்கள்: அகீல் ஹொசன், அல்ஸாரி ஜோசப், ஜான் கரிகோ

West Indies vs Papua New Guinea Fantasy Tips, WI vs PNG: Dream11 Team, West Indies vs Papua New Guinea: Predicted XIs, WI vs PNG: Pitch Report, WI vs PNG: Live Streaming Details, WI vs PNG: Head-to-Head, WI vs PNG: Dream11 Prediction match 2 ICC T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News