டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பிராண்டனுடன் இணைந்த கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கொரும் மளமளவென உயர்ந்தது . இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பிராண்டன் கிங் 2 பவுண்டரி,  3 சிக்ஸர்களுடன் 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் - ஆன்ட்ரே ஃபிளெட்சர் ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் ஃபிளெட்சர் 29 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்ஃபெர்ட் 26 ரன்களுக்கும், ஃபேபியன் ஆலன், ஆகீல் ஹொசைன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ்டன் சேஸ் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குயின்டன் டி காக் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ரீசா ஹென்றிக்ஸும் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன் 19 ரன்களுக்கும், மேத்யூ பிரீட்ஸ்கி 12 ரன்களுக்கும், பெஹ்லுக்வாயோ 3 ரன்களிலும், கேப்டன் ரஸ்ஸி வேண்டர்  டுசென் 30 ரன்களிலும், வியான் முல்டர் ஆகியோரும் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவால் அந்த அணியால் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News