WI vs SA, 4th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சு!

Updated: Thu, Jul 01 2021 23:11 IST
WI vs SA, 4th T20I: South Africa have won the toss and have opted to field (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், ஏறக்குறைய தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 4ஆவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை1) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவுசெய்துள்ளது. 

இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில், கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி எந்தவித மாற்றங்களுமின்றி இப்போட்டியை எதிர்கொள்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் - லிண்டல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரெ ரஸ்ஸல், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஓபெட் மெக்காய், ஃபிடல் எட்வர்ட்ஸ்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக் , ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை