WI vs SA, 5th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்!

Updated: Sat, Jul 03 2021 23:15 IST
WI vs SA, 5th T20I: South Africa have won the toss and have opted to bat (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 4 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத்  தீர்மானிக்கும் 5ஆவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை1) நடைபெறுகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ரீசா ஹெண்ட்ரிக்ஸிற்கு பதிலாக விவான் முல்டர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபாபியன் ஆலனிற்கு பதிலாக அகில் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் - லிண்டெல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரெ ரஸ்ஸல், டுவைன் பிராவோ, அகில் ஹொசைன், ஓபெட் மெக்காய், ஃபிடல் எட்வர்ட்ஸ்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி கோக் , டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், விவான் முல்டர்,ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை