West Indies vs South Africa Dream11 Prediction 3rd T20I: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

Advertisement

இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

WI vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - சபீனா பார்க், ஜமைக்கா
  • நேரம் - நள்ளிரவு 12.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

WI vs SA: Pitch Report

இப்போட்டி நடைபெறும் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியை ஈட்டியுள்ளது. அதிலும் கடந்த போட்டியில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளனர். இதனால் நாளைய ஆட்டத்திலும் வானவேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WI vs SA: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 21
  • தென் ஆப்பிரிக்கா - 11
  • வெஸ்ட் இண்டீஸ் - 10

WI vs SA: Live Streaming Details

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.

West Indies vs South Africa Predicted Teams

வெஸ்ட் இண்டீஸ் : ஜான்சன் சார்லஸ், கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங் (கே), ஆண்ட்ரே ஃபிளெட்சர், ரோஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலன், அகீல் ஹொசைன், குடாகேஷ் மோட்டி, ஓபேத் மெக்காய், மேத்யூ ஃபோர்டே, ஷமர் ஜோசப்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன், ரஸ்ஸி வான் டெர் டுசென் (கே), மேத்யூ ப்ரீட்ஸ்கே, வியான் முல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ஜெரால்ட் கோட்ஸி, பிஜோர்ன் ஃபோர்டுயின், ஒட்னியல் பார்ட்மேன், லுங்கி இங்கிடி

WI vs SA: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜான்சன் சார்லஸ், குயின்டன் டி காக்(துணை கேப்டன்), ரியான் ரிக்கெல்டன்
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், பிராண்டன் கிங் (கேப்டன்), கைல் மேயர்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, வியான் முல்டர்
  • பந்து வீச்சாளர்: லுங்கி இங்கிடி, ஷமார் ஜோசப்
Advertisement

West Indies vs South Africa Fantasy Tips, WI vs SRH: Dream11 Team, West Indies vs South Africa: Predicted XIs, WI vs SRH: Pitch Report, WI vs SRH: Live Streaming Details, WI vs SRH: Head-to-Head, WI vs SRH: Dream11 Prediction 3rd T20I

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News