Advertisement

West Indies vs South Africa Dream11 Prediction, T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி தான் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

WI vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஜூன் 24, காலை 6 மணி (இந்திய நேரப்படி)

WI vs SA Pitch Report

ஆண்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மித வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 125 ரன்களாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிகளவு வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

WI vs SA T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 22
  • வெஸ்ட் இண்டீஸ் - 11
  • தென் ஆப்பிரிக்கா - 11
Advertisement

USA vs ENG: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

West Indies vs South Africa Probable Playing XI

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல் (கே), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஆண்ட்ரே ரஸல், அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஓபேத் மெக்காய்.

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே, ஒட்னியல் பார்ட்மேன்.

WI vs SA T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென், குயின்டன் டி காக் (துணை கேப்டன்), ஷாய் ஹோப்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்ரவுண்டர் - ஆண்ட்ரே ரஸல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, அல்ஸாரி ஜோசப், கேசவ் மஹராஜ்.
Advertisement

WI vs SA Dream11 Prediction,  T20 World Cup 2024, Today Match WI vs SA, WI vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs SA Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between  West Indies vs South Africa

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News