West Indies vs Uganda Dream11 Prediction Match 17, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து உகாண்டா அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதேசமயம் தங்களது முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் உகாண்டா அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

WI vs UGA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா
  • இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - ஜூம் 09ஆம் தேதி, காலை 06 மணி (இந்திய நேரப்படி)

WI vs UGA Pitch Report

Advertisement

கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்கு சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் மிதவேக பந்துவீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஏனெனில் இங்கு புதிய பந்தை பயன்படுத்தும் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் பவுன்ஸுடன் ஸ்விங்கும் இருப்பதால் பேட்டர்களாக எளிதில் ரன்களை குவிக்கமுடிவதில்லை. அதனால் சேஸிங் செய்யும் அணிகளுக்கு இந்த மைதானம் ஏற்றதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. 

WI vs UGA Head-to-Head

  • மோதிய போட்டிகள் -  00
  • வெஸ்ட் இண்டீஸ் - 00
  • உகாண்டா - 00

WI vs UGALive Streaming Details

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

West Indies vs Uganda Predicted Teams

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (வாரம்), ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல் (கே), ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி

உகாண்டா: சைமன் செசாசி , ரோஜர் முகாசா, ராபின்சன் ஒபுயா, ரியாசத் அலி ஷா, தினேஷ் நக்ரானி, அல்பேஷ் ரம்ஜானி, கென்னத் வைஸ்வா, பிரையன் மசாபா (கே), ஜூமா மியாகி, காஸ்மாஸ் கெயூடா, ஃபிராங்க் நசுபுகா

WI vs UGA Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: பிராண்டன் கிங், ரியாசத் அலி ஷா
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆண்ட்ரே ரஸல், பிரைன் மசாபா, அல்பேஷ் ரம்ஜானி, ரோஸ்டன் சேஸ் (துணை கேப்டன்), ரொமாரியோ ஷெப்ஃபர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: குடகேஷ் மோட்டி, காஸ்மாஸ் கெயூடா

West Indies vs Uganda Fantasy Tips, WI vs UGA Dream11 Team, West Indies vs Uganda: Predicted XIs, WI vs UGA Pitch Report, WI vs UGA Live Streaming Details, WI vs UGA: Head-to-Head, WI vs UGA Dream11 Prediction match 18 ICC T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News