ஐபிஎல் 15ஆவது சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேற முக்கிய காரணம் ஜோஸ் பட்லர். ஜோஸ் பட்லரின் அதிரடியான பேட்டிங்கால் தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
 
இந்த சீசனில் அபாரமாக பேட்டிங் ஆடிய பட்லர், 16 போட்டிகளில் 4 சதங்களுடன் 824 ரன்களை குவித்துள்ளார். ஆர்சிபிக்கு எதிரான முக்கியமான நாக் அவுட் போட்டியில் 60 பந்தில் 106 ரன்களை குவித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். இந்த சதம் இந்த சீசனில் அவரது 4வது சதம். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக சதங்கள் அடித்த விராட் கோலியின்(2016ல் 4 சதங்கள்) சாதனையை சமன் செய்துள்ளார் பட்லர். இறுதிப்போட்டியிலும் அவர் நன்றாக ஆடினால் ராஜஸ்தானுக்கு கோப்பை உறுதி.
 
ஜோஸ் பட்லர் நன்றாக ஆடும்போதெல்லாம் ஒரு பெண்ணை டிவியில் காட்டினர். உடனே அவர் தான் பட்லரின் மனைவி என அனைவரும் நினைத்தனர். ஆனால் லாரா என்ற அந்த பெண், ராஜஸ்தான் அணியில் ஆடும் தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வாண்டர் டசனின் மனைவி. 
 
இதை அவரே தெளிவுபடுத்தியதுடன், டசனின் மனைவியான தன்னை, பட்லரின் பேட்டிங்கிற்கு உற்ச்சாகம் செய்ததும் பட்லரின் மனைவி என நினைத்ததாகவும், தனது கணவர் ஆடும் லெவனில் இடம்பெறாததால் பட்லரை உற்சாகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

Advertisement

ஜாஸ் பட்லர் ஒவ்வொரு முறையும் சிக்ஸர்களை அடிக்கும் போதெல்லாம், மைதானத்தில் வாண்டர் டுசனின் மனைவி லாரா துள்ளி குதித்து உற்சாகமாக கொண்டாடுவார். அவரின் கூச்சல்கள் தொலைக்காட்சிகளில் நேரலையில் பதிவானது.

Advertisement

இதனால் ஜாஸ் பட்லரின் மனைவி லாரா தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். இந்த சூழலில் தான் லாரா பேசியுள்ளார். அதில், ஜாஸ் பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் வாண்டர் டுசனின் மனைவி. ஆனால் நான் தான் அந்த லூசி என ரசிகர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். தற்போது பட்லர் எனது 2ஆவது கணவர் போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மோசமான விஷயம் என்னவென்றால் லூசியை இதற்கு முன்பு நான் பார்த்தது கூட இல்லை எனக் கூறியுள்ளார். கேமிராவில் அடிக்கடி பார்த்ததால் ரசிகர்கள் குழம்பி உள்ளனர். 
 
இந்நிலையில், பட்லரின் உண்மையான மனைவியின் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. பட்லரின் மனைவி லூயிஸ். ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்தும் லூயிஸுக்கும் பட்லருக்கும் இடையே ஃபிட்னெஸ் மூலம் தான் உறவு வளர்ந்துள்ளது.

பட்லர் - லூயிஸ் ஜோடிக்கு 2 பெண் குழந்தைகள். முதல் குழந்தை ஜார்ஜியா ரோஸ். 2019ல் முதல் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தான் ஜார்ஜியா ரோஸ். அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு பிறந்த 2ஆவது பெண்குழந்தையின் பெயர் மர்காட் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News