நியூசிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மவுண்ட் மங்குனியில் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
Advertisement
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மரூஃப் 78 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
இதில் தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 34.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.