மகளிர் டி20 சேலஞ்ச்: ஹர்மன்ப்ரித் அரைசதம்; வெலாசிட்டிக்கு 151 டார்கெட்!

Updated: Tue, May 24 2022 17:02 IST
Womens T20 Challenge 2022 : Supernovas finishes off 150/5 on their 20 overs (Image Source: Google)

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் - வெலாசிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிரங்கிய சூப்பர்நோவாஸ் அணியில் பிரியா புனியா, டேண்ட்ரா டோட்டின், ஹர்லீன் டியோல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரித்- தனியா பாட்டியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரித் கவுர் அரைசதம் அடிக்க, மறுமுனையிலிருந்த தனியா பாட்டியா 36 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்மன்ப்ரித் கவுர் 71 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சூப்பர்நோவாஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை