ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளும் முன்னேறின. 

Advertisement

அந்தவகையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடும் முயற்சியில் இறங்கினர். இதில் ஜார்ஜியா பிளிம்மர் 9 ரன்களி மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் சூஸி பேட்ஸுடன் இணைந்த அமெலியா கெர் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூஸி பேட்ஸ் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சோஃபி டிவைனும் 6 ரன்களுடனும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய புரூக் ஹாலிடே வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். 

பின் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புரூக் ஹாலிடே தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமெலியா கெரும் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். இறுதியில் மேடி கிரீன் 12 ரன்களைச் சேர்க்க, நியூசிலாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மலபா 2 விக்கெட்டுகளையும், அயபொங்கா காக்கா, சோலே ட்ரையோன், நதின் டி கிளார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News