ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தஸ்கின் பிரிட்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் லாரா வோல்வார்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 64 ரன்களை எட்டியது. 

Advertisement

அப்போது அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் தஸ்மின் பிரிட்ஸுடன் இணைந்த மரிஸான் கேப்பும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் இருவரும் அரைசதத்தை நெருங்கிய நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களையும், மரிஸான் கேப்டன் 6 பவுண்டரிகளுடன் 43 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 

அதன்பின் சுனே லூஸ் தனது பங்கிற்கு 18 ரன்களைச் செர்க்க, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைக் குவித்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் ரேச்சல், கேத்ரீன், ஒலிவியா, ஃபிரேசர் மற்றும் டார்சி கார்ட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர்.

அந்த வகையில் அந்த அணியில் அதிகபட்சமாகவே கேத்ரின் ஃபிரேசர் 14 ரன்களையும், ஐல்ஸா லிஸ்டர் 12 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ மலபா 3 விக்கெட்டுகளையும், சோலே ட்ரையான், நதின் டி கிளார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News