கடந்த 2017 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளான கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கைவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கேப்டன் ஹீதர் நைட், டேனி வியாட், இசா குஹா, ஜென்னி கன் உள்ளிட்ட இங்கிலாந்து அணியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் இத்திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisement

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “திருமணம் செய்து கொண்ட கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நாட் ஸ்கைவர் ஆகியோருக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. 

Advertisement

கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கைவர் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் உறுப்பினர்கள். இருவரும் 2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இடம்பெற்றனர்.

அக்டோபர் 2019 இல் கேத்ரின் ப்ரன்ட் உடனான நிச்சயதார்த்தத்தை நடாலி ஸ்கைவர் அறிவித்தார். இந்த ஜோடி செப்டம்பர் 2020 இல் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். 

 

ஆனால் கரோனா தொற்று அவர்களின் திருமணத்தைத் தாமதப்படுத்திவிட்டது. இந்நிலையில் இந்த ஜோடி தற்போது விளையாட்டில் மட்டுமல்லாமல் மணவாழ்க்கையிலும் இருவரும் இணைந்துள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News