மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ச் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து மும்பை இந்தியன்ஸை பந்துவீச அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ச் அணியின் தொடக்க பேட்டா் தேவிகா வைத்யா 6, கிரண் நவ்கிரே 17 ரன்களுடன் வெளியேறினா். பின்னர் ஜோடி சேர்ந்த அலிஸா-தஹ்லியா மெக்ராத் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. அலிஸா ஹீலி 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 58 ரன்களையும், டஹிலா 9 பவுண்டரியுடன் 50 ரன்களையும் விளாசி அரைசதம் பதிவு செய்தனா். 

Advertisement

அதனைத்தொடர்ந்து வந்த சோபி எக்லஸ்டோன் 1, தீப்தி சா்மா 7 அவுட்டான நிலையில், சிம்ரன் 9, ஸ்வேதா 2 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தனா். இதன்மூலம் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் யுபி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைக் குவித்தது. மும்பை தரப்பில் சைகா இஷாக் 3 விக்கெட்டுகளையும், அமிலியா கொ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதையடுத்து 160 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் கண்ட மும்பை அணியில் ஹீலி மேத்யூஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த யஷ்திகா பாட்டிய - நாட் ஸ்கைவர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷ்திகா பாட்டியா 27 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 ரன்களையும், நாட் ஸ்கைவர் 45 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News