WPL 2024: திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்; தடுக்க முயன்ற அலிசா ஹீலி - வைரலாகும் புகைப்படம்!

Updated: Thu, Feb 29 2024 13:13 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹீலி மேத்யூஸின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணியிக்கு கிரன் நவ்கிரே - கேப்டன் அலிசா ஹீலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் கிரண் நவ்கிரே 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்களையும், அலிசா ஹீலி 33 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழகாமல் இருந்த கிரேஸ் ஹாரிஸ் 38 ரன்களையும், தீப்தி சர்மா 27  ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கிரண் நவ்கிரே ஆட்டநாயகி விருதை வென்றார்.

இந்நிலையில், இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது மைதானத்தில் ரசிகர் ஒருவர் அத்துமீறி களத்திற்கு உள்ளே நுழைந்தார். அப்போது களத்தில் இருந்த யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அந்நபரை தடுக்க முயன்றார். இதனால் தடுமாறிய அந்நபரை மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

 

முன்னதாக மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸும் இதுபோன்று மைதானத்தில் அத்துமீறி நுழைந்த நபர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது அலிசா ஹீலியும் அதேபோன்று அத்துமீறி நுழைந்த நபரை தடுத்த புகைப்படங்களை இணைந்து ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை