இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் மெக் லெனிங் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷஃபாலி வர்மா - அலிஸ் கேப்ஸி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசித் தள்ளிய ஷஃபாலி வர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

Advertisement

அதன்பின் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிஸ் கேப்ஸி 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 46 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் ஜோடி சேர்ந்த மரிஸான் கேப் மற்று, ஜெஸ் ஜோனசன் இணையும் பவுண்டரிகளாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி 200 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என மரிஸான் கேப் தனது விக்கெட்டை இழந்தார். ஆனலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெஸ் ஜோனசன் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் என 36 ரன்களை விளாசி ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். 

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் சோஃபி டிவைன், நாதின் டி கிளார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேலும் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரில் அதிகபட்ச ஸ்கோரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News