ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹீலி மேத்யூஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யஷ்திகா பாட்டியாவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 32 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் நாட் ஸ்கைவர் பிரண்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைத் தாண்டிய நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்மன்பிரீத் கவுர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அமெலியா கெர் 9 ரன்களுக்கும், சஜீவான் சாஜனா ஒரு ரன்னிலும், அமஞ்ஜோத் கௌர் 7 ரன்னிலும், சமஸ்கிருதி குப்தா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 13 பவுண்டரிகளுடன் 80 ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். இதில் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் மெக் லெனிங்கும் விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களிலும், அனபெல் சதர்லேண்ட் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அலிஸ் கேப்ஸி மற்றும் அறிமுக வீரங்கனை நிக்கி பிரசாத் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதன்பின் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலிஸ் கேப்ஸி விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய சாரா பிரைஸும் 21 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் ராதா யாதவ் அதிரடியாக விளையாட கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. மும்பை தரப்பில் கடைசி ஓவரை சாஜனா வீசிய நிலையில் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய நிக்கி பிரசாத், அடுத்த இரண்டு பந்துகளில் 3 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் 35 ரன்கள் எடுத்த நிலையில் நிக்கி பிரசாத் விக்கெட்டை இழக்க, டெல்லி அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. இறுதியில் கடைசி பந்தை எதிர்கொண்ட அருந்ததி ரெட்டி பந்தை ஆஃப் சைடில் அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சி செய்ததுடன் நூழிலையில் ரன் அவுட்டில் இருந்து தப்பி டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இன்னிங்ஸின் கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News