நியூசிலாந்து அணியானது இலங்கையுல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியானது அபாரமான வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

அதன்படி இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 156 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 71.67 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

Advertisement

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு  டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ள இலங்கை அணியானது 55.56 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடதை தக்கவைத்துள்ளது. அதேசமயம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணியானது 37. 50 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணியானது 42.86 புள்ளிக்களுடன் 4ஆம் இடத்தையும், தொடருக்கு முன்னதாக 50 புள்ளிகளுடன்  மூன்றாம் இடத்திலும் இருந்த நிலையில் தற்சமயம் 7ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 42.19 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தையும், வங்கதேச அணி 39.29 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்க அணி 38.89 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திலும் உள்ளன. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதில் நியூசிலாந்து அணி 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தாலும், பாகிஸ்தான் அணி 19.05 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இலங்கை அணியானது தற்சமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான தேர்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News