உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை தக்கவைத்த இந்திய அணி!

Updated: Sun, Sep 22 2024 22:27 IST
Image Source: Google

வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 71.67 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது. முன்னதாக இந்த பட்டியலில் இந்திய அணி 68.52 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்று புள்ளிகள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் முதலிடத்தை தக்கவைத்தது. 

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். அதேசமயம் நியூசிலாந்து அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகிறது. அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய வங்கதேச அணியானது நான்காம் இடத்தை இழந்ததுடன், இரண்டு இடங்கள் பின் தங்கி 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இலங்கை அணி 42,86 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும், இங்கிலாந்து அணி 42.19 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது 38.89 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலு, பாகிஸ்தான் அணி 19.05 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை