WTC Final, Day 2: பாட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு; 138 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Jun 12 2025 18:50 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங்  செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த் அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டார் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர். 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டெம்பா பவுமா - டேவிட் பெடிங்ஹாம் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இதில் பவுமா 36 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய டேவிட் பெடிங்ஹாமும் 45 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

தென் அப்பிரிக்க பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை