ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அரையிறுதி போட்டியை தவறவிடும் ஜெய்ஸ்வால்!

Updated: Sun, Feb 16 2025 20:19 IST
Image Source: Google

இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, விதர்பா, கேரளா மற்றும் குஜராத் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. 

இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மும்பை அணியின் பேட்டிங் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நாக்பூரில் நடந்த மும்பை அணியின் பயிற்சி அமர்வில் அவர் களமிறங்கினார், ஆனால் வலைகளில் பேட்டிங் செய்யும்போது அசௌகரியத்தை உணர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விதர்பா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அப்போட்டியில் அவர் சோபிக்க தவறிய நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் விடுவிடுக்கப்பட்டார். இருப்பினும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கூடுதல் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்திய அணிக்கு தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் துபாய் செல்வார்கள் என்பதால், தற்போது இருவரும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த ஆயத்தமாகினர். இந்நிலையில் தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயம் காரணமாக ரஞ்சி கோப்பை போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய அணி தேர்வாளர்கள் இப்போது புதிய ரிஸர்வ் வீரரை அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மும்பை வீரர்கள்: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த், ஹர்திக் தோமர், சூர்யான்ஷ் ஷேட்ஜ், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டி'சோசா, ராய்ஸ்டன் டைஸ், அதர்வ் அங்கோலேகர், ஹர்ஷ் தன்னா.

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை