சஹாலின் பெற்றோருக்கு கரோனா - தனஸ்ரீ வர்மா!

Updated: Thu, May 13 2021 17:36 IST
Image Source: Google

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். இந்நிலையில் இன்று இவரது பெற்றோர்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை சஹாலின் மனைவி தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அப்பதிவில் “சாஹலின் தாயாருக்கு அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது தந்தைக்கு அதிகப்படியான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைவரும் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்” என அப்பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் தனஸ்ரீ யின் தாயார் மற்றும் சகோதரருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அவரின் தகவலில், நான் ஐபிஎல் தொடரின் பபுளில் இருந்தபோது என் தாய் மற்றும் சகோதரருக்கு கரோனா உறுதியானது. அவர்கள் தற்போது குணமடைந்து விட்டார். எனினும் குடும்பத்தினர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் அவர்களை என்னால் கவனித்துக் கொள்ள முடியாமல் போனது பெரும் வேதனையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த யுவேந்திர சஹால் சமீபத்தில் தான் வீடு திரும்பினார். குடும்பத்தினருடன் எப்படியும் அவர் நெருங்கி பழகி இருப்பார் என்பதால் அவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை