இந்திய அணியின் சீனியர் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இந்தியாவிற்காக 67 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் ஆடியுள்ள யுஸ்வேந்திர சாஹல் முறையே 118 மற்றும் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Advertisement

யுஸ்வேந்திர சாஹல் நடன கலைஞரும், யூடியூப் பிரபலமுமான தனஸ்ரீ வர்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2020 டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். தனஸ்ரீ வர்மா, சாஹல் ஆடும் போட்டிகளை காண தவறாது சென்றுவிடுவார். இந்தியாவிற்காகவோ அல்லது ஐபிஎல்லிலோ, எந்த போட்டியில் ஆடினாலும் நேரில் சென்று சாஹலை உற்சாகப்படுத்துவார்.

Advertisement

இப்படியாக இருவரும் பரஸ்பரம் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நிலையில், அண்மையில் தனஸ்ரீ வெர்மா, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாஹல் பெயரை நீக்கிவிட்டார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. யுஸ்வேந்திர சாஹலும், புதிய வாழ்வில் அடியெடுத்து வைப்பதாக தெரிவித்திருந்தார். அதனால் இருவரும் பிரியவுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளை கூற, இது சமூக வலைதளங்களில் பரபரப்பானது.

இதையடுத்து, இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், “எங்கள் உறவு குறித்த எந்தவிதமான வதந்தியையும் பரப்பவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்” என்று சாஹல் பதிவிட்டு தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த விஷயத்தில் தற்போது தனஸ்ரீ வர்மாவும் மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தனஸ்ரீ வெர்மா, “நடனம் ஆடும்போது காலில் காயம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் 2 வாரமாக ஓய்வில் இருக்கிறேன். என் வீட்டில் என் கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் என்னை நன்றாக கவனித்துக்கொள்கின்றனர். இந்த காயத்திலிருந்து விரைவில் மீண்டு வருவேன். ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகளிலிருந்தும் மீண்டு வருவேன். மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரப்புங்கள். மற்றவற்றை தவிருங்கள்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News