ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Dec 25 2024 20:48 IST
Image Source: Cricketnmore

Zimbabwe vs Afghanistan 1st Test Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றி பெற்றதுடன், ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை (டிசம்பர் 26) முதல் தொடங்கவுள்ளது. அதன்படி ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றியுள்ள நிலையில், டெஸ்ட் தொடரிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பும் என்பதாலும், மறுபக்கம் இந்த தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் ஜிம்பாப்வே அணி விளையாடும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ZIM vs AFG 1st Test: Match Details

மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான்
இடம்: குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், புலவாயோ
நேரம்: டிசம்பர் 26, மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

ZIM vs AFG 1st Test: Live Streaming Details

ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில்  நேரலையில் காணலாம். 

ZIM vs AFG: Head-to-Head In Test

  • Total Matches: 02
  • Zimbabwe: 01
  • Afghanistan: 01
  • No Result: 00

ZIM vs AFG: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 25 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 307 ரன்களாகவும், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 175 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 713 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Zimbabwe vs Afghanistan Predicted XIs

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: தடிவானாஷே மருமணி, பென் குரன், கிரேக் எர்வின் (கே), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, பிரையன் பென்னட், ஜெய்லார்ட் கும்பி, ஜோனாதன் காம்ப்பெல், ரிச்சர்ட் ந்ங்கரவா, தகுத்ஸ்வநாஷே கைதானோ, ட்ரெவர் குவாண்டு

ஆஃப்கானிஸ்தான் உத்தேச லெவன்: செதிகுல்லா அடல், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மத்துல்லா ஒமர்சாய், இக்ராம் அலிகில், பஷீர் ஷா, ஸியா உர் ரஹ்மான், அல்லா கசான்ஃபர், நவீத் ஜத்ரான், ஃபரீத் அஹ்மத். 

ZIM vs PAK Dream11 Team

  • Wicket-keeper: இக்ராம் அலிகில்
  • Batters: செதிகுல்லா அடல், ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கிரேய்க் எர்வின், பென் கரன்
  • All-rounders: சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • Bowlers: அல்லா கசன்ஃபர், ரிச்சர்ட் ந்ங்கரவா, ட்ரெவர் குவாண்டு

ZIM vs AFG 1st Test Dream11 Prediction, ZIM vs AFG Dream11 Prediction, Today Match ZIM vs AFG, ZIM vs AFG ODI Series, ZIM vs AFG Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs AFG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Afghanistan

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை