Zimbabwe vs Afghanistan 2nd Test Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. இத்தொடரிலும் இரு அணியும் சமநிலையில் உள்ளன. .

Advertisement

இதனையடுத்து ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது நாளை (ஜனவரி 02) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணியைச் சேர்ந்த பேட்டர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர். மேற்கொண்டு இரு அணிகளும் கிட்டத்தட்ட முதல் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதனால் இப்போட்டியிலும் அவர்களது அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

ZIM vs AFG 2nd Test: Match Details

மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான்
இடம்: குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், புலவாயோ
நேரம்: ஜனவரி 26, மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

ZIM vs AFG 2nd Test: Live Streaming Details

ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில்  நேரலையில் காணலாம். 

ZIM vs AFG: Head-to-Head In Test

  • Total Matches: 03
  • Zimbabwe: 01
  • Afghanistan: 01
  • No Result: 01

ZIM vs AFG: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 25 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 307 ரன்களாகவும், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 175 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 713 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Zimbabwe vs Afghanistan Predicted XIs

Advertisement

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: ஜெய்லார்ட் கும்பி, பென் கரண், டகுஸ்வானாஷே கைடானோ, சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கே), டியான் மியர்ஸ், பிராண்டன் மவுடா, பிரையன் பென்னட், நியூமன் நியாம்ஹுலி, பிளெஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு

ஆஃப்கானிஸ்தான் உத்தேச லெவன்: அப்துல் மாலிக், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அல்லா கசான்ஃபர், அஃப்சர் ஸஸாய், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷாஹிதுல்லா கமால், நவீத் ஸத்ரான், ஜியா-உர்-ரஹ்மான், ஜாஹிர் கான்

ZIM vs PAK Dream11 Team

  • Wicket-keeper: அஃப்சர் ஸஸாய்
  • Batters: செதிகுல்லா அடல், ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கிரேய்க் எர்வின், பென் கரன்
  • All-rounders: சீன் வில்லியம்ஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • Bowlers: அல்லா கசன்ஃபர், நவீத் ஸத்ரான், பிளெஸிங் முஸரபானி, ட்ரெவர் குவாண்டு
Advertisement

ZIM vs AFG 1st Test Dream11 Prediction, ZIM vs AFG Dream11 Prediction, Today Match ZIM vs AFG, ZIM vs AFG ODI Series, ZIM vs AFG Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs AFG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Afghanistan

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News