Zimbabwe vs India, 5th T20I Dream11 Prediction: ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையில், அடுதடுத்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஜிம்பாப்வே அணி தொடரை இழந்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

ZIM vs IND 5th T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இந்தியா
  • இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானம், ஹராரே
  • நேரம் - ஜூலை 14, மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ZIM vs IND 5th T20I Pitch Report

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 54 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறுள்ளன. இதில் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியானது 31 முறையும், சேஸிங் செய்யும் அணி 21 முறையும் வெற்றியைக் கண்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 152 ரன்களாக இருந்துள்ளது. அதேசமயம் இத்தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 234 ரன்களைக் குவித்ததே , இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ZIM vs IND T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 11
  • இந்தியா - 09
  • ஜிம்பாப்வே - 03

ZIM vs IND T20I: Where to Watch?

Advertisement

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை ஓடிடி தளத்தில் அனுபவிக்க விரும்பினால், அவர்கள் சோனி லைவ் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி தொடரை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Zimbabwe vs India 5th T20I Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், கலீல் அஹ்மத், ரவி பிஷ்னோய்.

Advertisement

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: வெஸ்லி மதேவெர, தடிவானாஷே மருமணி, பிரையன் பென்னட், சிக்கந்தர் ரஸா (கே), தியான் மேயர்ஸ், ஜானதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மஸகட்ஸா, ரிச்சர்ட் ந்ங்கரவா, பிளெஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா

ZIM vs IND 5th T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ஆபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் , வெஸ்லி மதேவெர
  • ஆல்ரவுண்டர் - சிக்கந்தர் ரஸா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், பிரையன் பென்னட்
  • பந்துவீச்சாளர்கள் - ஆவேஷ் கான், பிளெஸிங் முசரபானி, ரவி பிஷ்னோய்,டெண்டாய் சதாரா

ZIM vs IND 5th T20I Dream11 Prediction, Today Match ZIM vs IND, ZIM vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Zimbabwe

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News