ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாதனை வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ருதுராஜ் கெய்க்வாட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

Advertisement

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 100 ரன்களில் அபிஷேக் சர்மா விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களையும், ரிங்கு சிங் 48 ரன்களையும் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைக் குவித்தது. 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் அவர் தனது இரண்டாவது போட்டியிலேயே சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த இன்னிங்ஸில் சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்தார். 

Least innings taken to hit a 100s for India in T20Is

  • 2 - Abhishek Sharma*
  • 3 - Deepak Hooda
  • 4 - KL Rahul

முன்னதாக இந்திய வீரர் தீபக் ஹூடா தனது மூன்றாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார். மேற்கொண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் சர்மா இன்று படைத்துள்ளார். 

Advertisement

Fastest hundred for India in T20Is (by balls faced)

  • 35 - Rohit Sharma vs SL, Indore, 2017
  • 45 - Suryakumar Yadav vs SL, Rajkot, 2023
  • 46 - KL Rahul vs WI, Lauderhill, 2016
  • 46 - Abhishek Sharma vs ZIM, Harare, 2024*

மேற்கொண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த மூன்றாவது வீரர் எனும் கேஎல் ராகுலின் சாதனையை அபிஷேக் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார். முன்னதாக கேஎல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2016ஆம் ஆண்டு 46 பந்துகளில் சதமடித்திருந்தார். மேலும் இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் சதமடித்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

Youngest Indians to hit a hundred in T20Is

  • 21y 279d - Yashasvi Jaiswal vs NEP, 2023
  • 23y 146d - Shubman Gill vs NZ, 2023
  • 23y 156d - Suresh Raina vs SA, 2010
  • 23y 307d - Abhishek Sharma vs ZIM, 2024*
Advertisement

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். முன்னதாக இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 279 நாள்களில் சதமடித்து அசத்தியதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த பட்டியலில் அபிஷேக் சர்மா 23 வயது 146 நாள்களில் சதமடித்து இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News