ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்துள்ளனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். 

Advertisement

இந்திய அணி

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இத்தொடரின் முதல் டி20 போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது போட்டியில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் சொதப்பிய அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளன. இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலும் இந்திய அணி அபாரமான வெற்றிகளைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கொண்டு மேற்கொண்டு முதலிரண்டு போட்டிகளில் இடம்பேறமல் இருந்த நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே ஆகியோர் இப்போட்டிக்கான இந்திய அணியில் இணைந்துள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. இதில் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகம் பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா உத்தேச லெவன்: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ரிங்கு சிங், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய்.

ஜிம்பாப்வே அணி

மறுபக்கம் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியானது இத்தொடருக்கான அணியில் பல்வேறு மாற்றங்களைச் சேய்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் அந்த அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ஆனால் இரண்டாவது போட்டியில் ஃபீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் சொதப்பியதன் காரணமாக அந்த அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. இருப்பினும் அந்த அணியும் தங்களால் முடிந்த அளவிற்கு வெற்றிக்காக போராடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

ஜிம்பாப்வே அணியின் பேட்டிங்கில் பிரையன் பென்னட், வெஸ்லி மதேவெரா, ஜோனதன் கேம்ப்பெல், இன்னசென் கையா, கிளைவ் மடாண்டே ஆகியோரும், பந்து வீச்சில் பிளெஸிங் முஸரபானி, வெலிங்டன் மஸகட்ஸா, லுக் ஜோங்வா, டெண்டாய் சதாரா ஆகியோருடன் கேப்டன் சிக்கந்தர் ரஸாய், பிரையன் பென்னட் ஆகியோரும் பந்துவீச்சில் தங்களது பங்களிப்பை செலுத்து வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: வெஸ்லி மதேவெர, இன்னசென்ட் கையா, பிரையன் பென்னட், சிக்கந்தர் ரஸா (கே), தியான் மேயர்ஸ், ஜானதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மஸகட்ஸா, லூக் ஜாங்வே, பிளெஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா

ZIM vs IND 3rd T20I Dream11 Team

விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்)
பேட்ஸ்மேன்கள் - ஆபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் , வெஸ்லி மதேவெர
ஆல்ரவுண்டர் - சிக்கந்தர் ரஸா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், பிரையன் பென்னட்
பந்துவீச்சாளர்கள் - முகேஷ் குமார், பிளெஸிங் முசரபானி, ரவி பிஷ்னோய்,டெண்டாய் சதாரா

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News