ZIM vs IRE, 1st T20I: அயர்லாந்தை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே!

Updated: Thu, Jan 12 2023 21:50 IST
ZIM vs IRE 1st T20I: Zimbabwe go 1-0 up in the series with a convincing win! (Image Source: Google)

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஆண்டி பார்ல்பிர்னி, ரோஸ் அதிர் ஆகியோர் தலா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்பின் களமிறங்கிய ஹாரி டெக்டர் 5, ஸ்டீபன் தொஹனி 15, கர்டிஸ் காம்பெர் 20, ஜார்ஜ் டக்ரெல் 9, டெலானி 24 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இதனால் 19.2 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ரியான் பார்ல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியும் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கிரெய்க் எர்வின், மருமணி ஆகியோர் தலா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ட்து வந்த வெஸ்லி மதவெரேவும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த் கேரி பேலன்ஸ் - சீன் வில்லியம்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேரி பேலன்ஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் கடைசிவரை களத்தில் இருந்த சீன் வில்லியம்ஸ் 34 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இதன்மூலம் டி20 தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை