ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அயர்லாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கும்பி ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய கமுன்ஹுகம்வே ஒரு ரன்னிலும், கைடானோ 13 ரன்களிலும், இன்னசெண்ட் கையா 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர் பின்னர் கும்பியுடன் இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

Advertisement

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கும்பி அரைசதம் கடந்த நிலையில் 72 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிக்கந்தர் ரஸாவும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் ஹுமே, கர்டிஸ் கம்பேர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னி - கேப்டன் பால் ஸ்டிர்லிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பால் ஸ்டிர்லிங் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பால்பிர்னியுடன் இணைந்த கர்டிஸ் காம்பேர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்ல்பிர்னி அரைசதம் கடந்தார்.

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கர்டிஸ் காம்பேர் 40 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹாரி டெக்டர் 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரூ பால்பிர்னி 4 பவுண்டரி ஒரு சிக்சர் என 82 ரன்களையும், லோர்கன் டக்கர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். 

இதன்மூலம் அயர்லாந்து அணி 37.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆண்ட்ரூ பால்பிர்னியும், தொடர் நாயகனாக கர்டிஸ் காம்பேரும் தேர்வுசெய்யப்பட்டனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News