ZIM vs PAK 1st T20I Dream11 Predictionபாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை இழந்துள்ள ஜிம்பாப்வே அணி இத்தொடரில் அதற்கான பதிலடியை இத்தொடரில் கொடுக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வென்றுள்ள பாகிஸ்தான் அணி அதே உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

ZIM vs PAK 1st T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs பாகிஸ்தான்
  • இடம்: குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், புலவாயோ
  • நேரம்: மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி) 

ZIM vs PAK 1st T20I Live Streaming Details

Advertisement

ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில்  நேரலையில் காணலாம். 

ZIM vs PAK: Head-to-Head In T20is

  • மோதிய போட்டிகள்: 18
  • ஜிம்பாப்வே: 02
  • பாகிஸ்தான்: 16
  • முடிவில்லை: 00

ZIM vs PAK: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 19 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 13 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 06 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 154 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 130 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 236 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Zimbabwe vs Pakistan Predicted XIs 

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: தியான் மியர்ஸ், பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா (கே), ரியான் பர்ல், தடிவானாஷே மருமணி, கிளைவ் மடாண்டே, ரிச்சர்ட் ங்காரவா, பிளெஸ்ஸிங் முசரபானி, பிராண்டன் மவுடா, வெஸ்லி மாதேவெரே, தஷிங்கா முசேகிவா.

பாகிஸ்தான் உத்தேச லெவன்: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹசீபுல்லா கான், தயப் தாஹிர், உஸ்மான் கான், சல்மான் அலி ஆகா (கே), ஜஹந்தத் கான், இர்பான் கான், ஹாரிஸ் ரவுஃப், சுஃபியான் முகீம், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன்

ZIM vs PAK: Dream11 Team

  • Wicket-keeper: உஸ்மான் கான்
  • Batters: ரியான் பர்ல் , பிரையன் பென்னட், தையப் தாஹிர்
  • All-rounders: வெஸ்லி மதவெரே, சிக்கந்தர் ரஸா (கேப்டன்), ஆகா சல்மான்
  • Bowlers: ஹாரிஸ் ராவுஃப், அப்பாஸ் அஃப்ரிடி, ரிச்சர்ட் ங்காரவா, சுஃபியான் முகீம்
Advertisement

ZIM vs PAK 1st T20I Dream11 Prediction, Today Match ZIM vs PAK, ZIM vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Pakistan 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News