ZIM vs PAK 3rd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

ZIM vs PAK 3rd ODI: Match Details

  • மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs பாகிஸ்தான்
  • இடம் - குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
  • நேரம் - மதியம் 1 மணி (இந்திய நேரப்படி)

ZIM vs PAK 3rd ODI Live Streaming Details

ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில்  நேரலையில் காணலாம். 

ZIM vs PAK: Head-to-Head In ODIs

  • மோதிய போட்டிகள் - 64
  • ஜிம்பாப்வே - 06
  • பாகிஸ்தான் - 55
  • முடிவில்லை 03
Advertisement

ZIM vs PAK: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 94 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 39 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 49 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 234 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 198 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 399 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Zimbabwe vs Pakistan Predicted XIs 

Advertisement

ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, ஜாய்லார்ட் கும்பி, டியான் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, பிரையன் பென்னட், பிராண்டன் மவுடா, ரிச்சர்ட் ந்கராவா, பிளெஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு

பாகிஸ்தான்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான் (கே), ஹசீபுல்லா கான், ஆகா சல்மான், எம்.டி. இர்பான் கான், அமீர் ஜமால், ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், பைசல் அக்ரம்

ZIM vs PAK: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ்: கிரேக் எர்வின், சைம் அயூப், அப்துல்லா ஷபிக்
  • ஆல்ரவுண்டர்கள்: சிக்கந்தர் ராசா (கேப்டன்), சீன் வில்லியம்ஸ், சல்மான் அலி ஆகா
  • பந்துவீச்சாளர்கள்: பைசல் அக்ரம், ரிச்சர்ட் ந்கராவா, பிளெஸ்ஸிங் முசரபானி, ஹாரிஸ் ரவுஃப் (துணை கேப்டன்)
Advertisement

ZIM vs PAK 3rd ODI Dream11 Prediction, Today Match ZIM vs PAK, ZIM vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Pakistan 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News