Zimbabwe vs South Africa Test Series 2025: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Advertisement

இதையடுத்து இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர்.

இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார். முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது டெம்பா பவுமா தசைபிடிப்பால் அவதிப்பட்டு வந்தார். அந்த நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கந்து அசத்தியதுடன் அணியின் வெற்றியிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார்.

இந்நிலையில் தான் பவுமாவின் காயத்தின் அளவை மதிப்பிடுவதற்கு அவருக்கு மேலும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளபட உள்ளன. இதன் காரணமாகவே அவர் ஜிம்பாப்வெ டெஸ்ட் தொடரில் இருந்து பவுமா விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கானா தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மஹாராஜ் செயல்படுவார் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், தனகா சிவாங்கா, ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, கிளைவ் மடாண்டே, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்சா, பிரின்ஸ் மஸ்வாரே, குண்டாய் மாட்டிகிமு, ப்ளெஸிங் முசரபானி, நியூமன் நியாம்ஹுரி, தஃபட்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்

Advertisement

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: கேஷவ் மஹாராஜ் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், கார்பின் போஷ், டோனி டி சோர்ஜி, ஜுபைர் ஹம்சா, குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி இங்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, ப்ரீனெலன் சுப்ரயன், கைல் வெர்ரைன் மற்றும் கோடி யூசுஃப்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News