ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. ஹராரேவில் நடைபெற்றம இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் எர்வின் - மதெவெரே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தது. இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எர்வின் 39 ரன்களிலும், மதெவெரே 43 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேரி பேலன்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இதையடுத்து வந்த சீன் வில்லியம்ஸ் ஒரு பக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்தி வீரர்கள் சிக்கந்தர் ரஸா, ரியான் பார்ல் இணை அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் வில்லியம்சன்னுடன் கிளைவ் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் தொடரந்து அபாரமாக செயல்பட்டு அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சீன் வில்லியம்சன் 77 ரன்களில் ஆட்டமிழக்க, 52 ரன்களை சேர்த்திருந்த கிளைவ்வும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 49.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்களில் ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாரிஸ் அஹ்மத் 5 விக்கெட்டுகளையும், வான் மீகெரென், ஆக்கர்மேன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜிட் சிங் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஓடவுட் - டாம் கூப்பர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்டனர்ஷிப் அமைத்து அசத்தினர். 

அதன்பின் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 81 ரன்களில் மேக்ஸ் ஓடவுட்டும், 74 ரன்களில் டாம் கூப்பரும் தனது விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய காலின் அக்கர்மேன் 28 ரன்களிலும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

இதனையடுத்து வந்த வந்த நெதர்லாந்து வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் கடைசி பந்திற்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரியான் கெலின் ரன் அவுட்டாகினார். இதனால் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன் செய்துள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிக்கந்தர் ரஸா, வெஸ்லி மதெவெரே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News