பாகிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!

Updated: Mon, Nov 18 2024 20:42 IST
Image Source: Google

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி பாகிஸ்தனை ஒயிட்வாஷ் செய்தது. 

இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி அங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 24ஆம் தேதி முதலும், டி20 தொடரானது டிசம்பர் 1ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடந்த மாதமே அறிவித்திருந்தது. 

அதன்படி ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும்டி20 தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், நசீம் ஷான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் ஜிம்பாப்வே தொடர்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஜிம்பாப்வே ஒருநாள் மற்றும் டி20 அணியை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

இதில் ஒருநாள் அணியின் கேப்டனாக கிரேய்க் எர்வினும், டி20 அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸாவும் செயல்படவுள்ளனர். மேற்கொண்ட் இத்தொடருக்கான ஜிம்பாப்வே அணியில் அறிமுக வீரர்கள் ட்ரெவர் குவாண்டு, தஷிங்கா முசெகிவா மற்றும் டினோடெனா மபோசா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த அணியில் பிளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் நகரவா, சீன் வில்லியம்ஸ், ரியான் பார்ல், பிரையன் பென்னட் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

ஜிம்பாப்வே ஒருநாள் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜெய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, டினோடெனா மபோசா, தடிவானாஷே மருமணி, பிராண்டன் மவுடா, தஷிங்கா முசெகிவா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ்.

ஜிம்பாப்வே டி20 அணி: சிக்கந்தர் ரஸா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ரியான் பர்ல், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, டினோடெனே மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மஸகட்சா, பிராண்டன் மவுடா, தஷிங்கா முசெகிவா, பிளெஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் நகரவா.

பாகிஸ்தான் ஒருநாள் அணி: அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகமது டேனியல், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது இர்பான் கான், சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாநவாஸ் தஹானி, தயப் தாஹிர்.

பாகிஸ்தான் டி20 அணி: அகமது டேனியல், அராபத் மின்ஹாஸ், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், முகமது இர்பான் கான், உமைர் பின் யூசுப், காசிம் அக்ரம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அலி ஆகா, சுஃப்யான் முகிம், தயப் தாஹிர், உஸ்மான் கான்.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை