Sri Lanka Tour Of Zimbabwe: ஜிம்பாப்வே அணியானது எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடருக்கு முன்னதாக இலங்கை அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இலங்கை அணி தற்சமயம் வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த அணி வங்கதேசத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநால் தொடர் ஜூலை 2ஆம் தேதி முதலும், டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு பிறகு இலங்கை அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதலும், டி20 தொடர் செப்டம்பர் 03ஆம் தேதி முதலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்றும், இந்த டி20 தொடரை ஜிம்பாப்வே டி20 உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றுக்கான தயாரிப்பாக எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில். இலங்கையை நடத்துவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். எங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்கள் எப்போதும் ரசிகர்களின் ஆர்வத்தை பெற்றுள்ளது. 

மேலும் இந்த தொடர் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றுக்கு தயாராவதற்கு இத்தொடர் எங்கள் அணிக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கும் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது. இந்தத் தொடருக்கு முன், ஜிம்பாப்வே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதன்பின் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துடன் டி20 முத்தரப்பு தொடரிலும், நியூசிலாந்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜிம்பாப்வே - இலங்கை தொடர் அட்டவணை

  • ஆகஸ்ட் 29 - முதல் ஒருநாள் போட்டி
  • ஆகஸ்ட் 31 - இரண்டாவது ஒருநாள் போட்டி
  • செப்டம்பர் 3 - முதல் டி20 போட்டி
  • செப்டம்பர் 6 - இரண்டாவது டி20 போட்டி
  • செப்டம்பர் 7 - மூன்றாவது டி20 போட்டி
Advertisement

Also Read: LIVE Cricket Score

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News