ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. சுருக்கமாக ஆர்சிபி என அழைக்கப்படும் இந்த அணி, ஒவ்வோரு ஆண்டும் பல டி29 ஸ்பெஷ்லிஸ்டுகளைக் கொண்டு களமிறங்கும்.

Advertisement

இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணியால், ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றியதில்லை. இதன் காரணமாக இந்த அணி ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

அந்தவகையில் நடப்பு சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஆர்சிபி அணி, 7 போட்டிகளில் ஐந்து வெற்றியைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. 

ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரை விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ஏபிடி வில்லியர்ஸ், ஃபின் ஆலன், டிம் டேவிட் என நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது. 

பந்துவீச்சைப் பொறுத்தவரை யுஸ்வேந்திர சஹால், கைல் ஜேமிசன், முகமது சிராஜ் ஆகியோருடன், நவ்தீப் சைனி, துஷ்மந்தா சமீரா, வானிந்து ஹசரங்கா ஆகியோரும் அணியில் இடம்பிடித்திருப்பது அணிக்கு கூடுதல் பலமே.

ஆனாலும் வாஷிங்டன் சுந்தர், ஆடம் ஸாம்பா, கென் ரிச்சர்ட்சன் ஆகியோர் நடப்பு சீசனிலிருந்து விலகியுள்ளது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வாஷிங்டன் சுந்த பவர் பிளேவில் ஓவர் போடும் திறன் பெற்றவர். 

Advertisement

அவரது இழப்பு நிச்சயம் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் சபாஷ் அஹ்மத் அவரது இழப்பை ஈடுகட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 

வலிமையான பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அமீரகத்தில் நடைபெறும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இம்முறையாவது கோப்பையை வெல்லும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

IPL 2021 Royal Challengers Bangalore(RCB) Match Schedule

  • RCB vs KKR -September 20, 2021 - 7:30 PM-Abu Dhabi
  • RCB vs CSK -September 24, 2021- 7:30 PM-Sharjah
  • RCB vs MI -September 26, 2021- 7:30 PM-Dubai
  • RCB vs RR -September 29, 2021- 7:30 PM-Dubai
  • RCB vs PK - October 3, 2021 -3:30 PM-Sharjah
  • RCB vs SRH -October 6, 2021- 7:30 PM-Abu Dhabi
  • RCB vs DC -October 8, 2021- 7:30 PM-Dubai
Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், தேவதத் படிக்கல், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, சபாஷ் அஹ்மது, பவன் தேஷ்பாண்டே, கிளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ரஜத் படிதார், முகமது அசாருதீன், கைல் ஜேமிசன், டான் கிறிஸ்டியன், சுயேஷ் பிரபுதேசாய், கேஎஸ் பரத், டிம் டேவிட், துஷ்மந்த சமீரா, வனிந்து ஹசரங்கல், ஆகாஷ் தீப்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News