
காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடக்கிறது. 72 நாடுகளிலிருந்து 5,000 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
இந்த முறை காமன்வெல்த்தில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவுள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பார்படாஸ் மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
காமன்வெல்த்தில் மகளிர் கிரிக்கெட்டை சேர்த்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. பர்மிங்ஹாமில் நடக்கும் காமன்வெல்த்தில் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.