Advertisement
Advertisement
Advertisement

இது போன்ற அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - விராட் கோலி!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan January 10, 2023 • 20:24 PM
1st ODI: Glad I Could Play At Tempo Of The Game And We Got 370 Plus, Says Centurion Kohli
1st ODI: Glad I Could Play At Tempo Of The Game And We Got 370 Plus, Says Centurion Kohli (Image Source: Google)
Advertisement

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 45 ஆவது சர்வதேச ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் விளாச காத்திருந்த விராட் கோலி, தற்போது தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசி அசத்திருக்கிறார்.

விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 50 ஒவர் முடிவில் 373 ரன்கள் என்ற இலக்கை எட்டி உள்ளனர். இந்த நிலையில் தனது வெற்றியின் ரகசியம் குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

Trending


இதுகுறித்து பேசிய கோலி, “இலங்கைத் தொடருக்கு முன்பாக எனக்கு நல்ல ஓய்வு கிடைத்தது. அதன் பிறகு இரண்டு பயிற்சி முகாமில் பங்கேற்று இந்த போட்டிக்காக தயாராகினேன். வங்கதேச தொடர் முடிந்தவுடன் மனதளவிலும் உடல் அளவிலும் புத்துணர்ச்சியுடன் இருந்தேன். சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருந்தேன். 

இன்றைய ஆட்டத்தில் நான் அதிரடியாக விளையாடியதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர்களின் அபாரமான செயல்பாடு தான். ரோஹித் மற்றும் ஷுப்மன் கில் நல்ல அடிதளத்தை கொடுத்து எங்கள் மேல் இருந்த அழுத்தத்தை போக்கிவிட்டார்கள். இதன் காரணமாக நான் களத்திற்கு வந்தவுடன் என்னுடைய ஸ்ட்ரைக் ரெட்டில் மட்டும் நான் கவனம் செலுத்தினேன். 

தொடக்க வீரர்கள் கொடுத்த அடித்தளத்தை போட்டியின் முழுவதும் எடுத்துச் சென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் காரணமாக நாங்கள் 370 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறோம். என்னுடைய இரண்டு கேட்சுகளை இலங்கை வீரர்கள் தவற விட்டார்கள். இதுபோன்ற நாளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். எனக்கு அதிர்ஷ்ட ம் தனிப்பட்ட முறையில் தேவைப்படுகிறது.

இது போன்ற அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நான் சதமாக விளாசியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் இன்னிங்ஸ் மூலம் அணிக்கு ஒரு 20 ரன்கள் கூடுதலாக கிடைத்திருக்கிறது. 350 ரன்கள் அடித்திருந்தால் கூட எதிரணிகள் அதை துரத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. தற்போது இலங்கை வீரர்களும் ஏதேனும் இரண்டு பெரிய சதம் அடித்தால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும்.

பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் எங்களுக்கு பெரிய இலக்கு தேவை என்று நாங்கள் முன்பே முடிவு செய்தோம். தற்போது இது போன்ற ஒரு சூழல் எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். பனிப்பொழிவின் போது எப்படி பந்து வீச வேண்டும் என்று அவர்கள் பயிற்சி பெற இது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய உணவு பழக்கம் தான் என்னுடைய வயதிற்கு நான் என்ன உணவு சாப்பிடுகிறேன் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

எந்த உணவை சாப்பிட்டால் நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்பதை குறித்தும் மனதில் கொள்ள வேண்டும். என்னுடைய உணவு பழக்கத்தால் தான் என்னுடைய உடல் தகுதி சிறப்பாக இருக்கிறது. இதன் மூலம் தான் களத்தில் என் அணிக்காக 100 சதவீதத்தை என்னால் வெளிப்படுத்த முடிகிறது. தொடர்ந்து இதுபோன்ற ஆட்டத்தை அணிக்காக விளையாட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement