
நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதால் ஒருநாள் போட்டி நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 33 ரன்களையும், யஷ்திகா பாட்டியா 37 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களையும், தேஜல் ஹசப்னிஸ் 42 ரன்களையும், தீப்தி சர்மா 41 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதன் காரணமாக, 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் கெர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி வீராங்கனைகளால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக்வே புரூக் ஹாலிடே 39 ரன்களையும், மேடி கிரீன் 31 ரன்களையும் சேர்க்க, ஜார்ஜியா பிளிம்மர் 25, லாரன் டௌன் 26, அமெலியா கெர் 25 ரன்களில் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.