
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், மூன்று போட்டிகள் கொன ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமியா சர்க்கார் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் லிட்டன் தாஸும் 2 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் சௌமீயா சர்காருடன் இணைந்த கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த தன்ஸித் ஹசன் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் 28 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியிருந்தார். அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களை எத்த கையோடு மெஹிதி ஹசன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.